மானுடம்
வந்த வழி அறியாது
சென்ற வழி புரியாது
பிருட்டங்களின்
நிழல்களைத் தேடும்
மிருகக் கும்பல்
அண்ணாமலை
மா மலை
மருந்து மலை
ஞானத் தபோதனரை
வா வாவென்று அழைத்த மலை
அண்ணாமலை
தேவி கல்லோத்தரையில்
ஜப தப பூசை புனஸ்காரங்களை
தவிர்த்தல் நலம் என நல்கிய
சிவனையே
சடங்குச் சாமானாக
மாற்றியது பக்தர்கள் கூட்டம்
பிரமிள்
மொழியற்ற, சாதியற்ற, மதமற்ற
உண்மையை காணத் துடித்த அவனை
இந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை
அவனுக்கும் இவ்வுலகம் புரியவில்லை
நீட்ஷேவின் வாக்கு பொல்லாததுதான்
பாவம்
அவனை மற்றும் தாக்கிற்று
நான்
காலையில் வரும் பால் காரருக்கு
கணக்காளர் வூட்டம்மா
தாலி கட்டினவருக்கு
மனைவி
பிள்ளைகளுக்கு
அம்மா
என் பெற்றோர்களுக்கு
மகள்
கூடப் பிறந்தவர்களுக்கு
அக்கா / தங்கை
சேர்ந்து பணி புரிபவர்களுக்கு
"கொலீக்"
ஆனால்
பார்வதி, அத்தை, மாமி, ஆண்டி,
என்று
தினம் தினம் நான் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்
ஆனால்
நான் யார்?
பெயரா? உடலா? உறவுகளா? சம்பந்தங்களா?
நான் யார்?
தீராத கேள்விக் குறி
?????????????
No comments:
Post a Comment